ஜெருசலேம் துப்பாக்கிக்சூட்டில் 2 பேர் பலி, 6 பேர் காயம்

ஜெருசலேமில் மக்கள் நெரிசல் மிகுந்த டிராம் வண்டி நிலையத்திற்கு முன்னால் காரில் இருந்தபடி, ஒரு பாலஸ்தீனர் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்

துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு ஒரு போலிஸ்காரரும், 60 வயதான பெண்ணொருவரும் மருத்துவமனையில் வைத்து இறந்துவிட்டதாக ஒரு மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

இந்த தாக்குதலில் வேறு ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய பின்னர் காரை ஓட்டிச் சென்ற தாக்குதல்தாரியை மோட்டார் பைக்கில் போலிஸ்காரர்கள் துரத்திச் சென்றனர்.

கார் நிறுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது.

ஜெருசலேமின் கிழக்கு பகுதியை சேர்ந்த பாலஸ்தீனரான அந்த துப்பாக்கிதாரியை சுட்டு கொன்றுவிட்டதாக போலிஸ் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் இத்தகைய தாக்குதல்கள் பல நிகழ்ந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்