பெரும்பாலும் வளர்முக நாடுகளை சேர்ந்த 17 கர்தினால்களை நியமித்தார் போப்

போப் பிரான்சிஸ் 17 புதிய கர்தினால்களை நியமித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption புதிய கர்தினால்களில் பெரும்பாலோர் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்கள்

அவர்களில் 13 பேர் 80 வயதுக்கு கீழானவர்களாக இருப்பதால், தற்போதைய போப்பிற்கு பிறகு அடுத்தாக வருகின்ற போப்பை தேர்ந்தெடுக்கும் தருணத்தில், இந்த 13 பேரும் வாக்களிக்க முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 13 பேர் 80 வயதுக்கு கீழானவர்களாக இருப்பதால், அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதில் வாக்களிக்கும் வாய்ப்பு பெறுவர்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையை பன்முகப்படுத்துவதற்கு முயற்சிகளை போப் பிரான்சிஸ் தொடர்வதால், இந்த புதிய கர்தினால்களில் பெரும்பாலோர் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கர்தினாலாக உயர்நிலை பெறுவர்.