செச்சன்யாவில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

தீவிரவாதிகள் 8 பேரை சுட்டு கொன்றுள்ளதாக ரஷ்யாவின் தென் பகுதி பிராந்தியமான செச்சன்யப் பாதுகாப்பு படைப்பிரிவுகள் கூறியிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செச்சினியாவிலுள்ள இஸ்லாமியவாத பிரிவினைவாதிகளுக்கு எதிராக இரண்டு போர்களை ரஷ்ய படைப்பிரிவுகள் நடத்தியுள்ளன

இரண்டு கார்களில் பயணம் மேற்கொண்ட துப்பாக்கிதாரிகள் குடர்மெஸ்கை மாவட்டத்தில் இருக்கும் சோதனை நிலையத்தில் காரை நிறுத்தாமல் சென்றபோது தொடங்கிய துப்பாக்கிச்சூட்டில் நான்கு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

செச்சனியாவில் ஒரு தொடர் தாக்குதல்களை நடத்த இந்த துப்பாக்கிதாரிகள் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த துப்பாக்கிதாரிகள் தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்

1994 ஆம் ஆண்டிலிருந்து செச்சினியாவிலுள்ள இஸ்லாமியவாத பிரிவினைவாதிகளுக்கு எதிராக இரண்டு போர்களை ரஷ்ய படைப்பிரிவுகள் நடத்தியுள்ளன.

பொரும்பாலும் முஸ்லிம்கள் வாழுகின்ற, கொந்தளிப்பான ரஷ்யாவின் வடக்கு காக்கசஸ் பகுதியில், இன்னும் குறைந்த அளவிலான கிளர்ச்சியை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்