ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அகதி கைது

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிரியாவைச் சேர்ந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

22 வயதாகும் ஜபெர் அல்பக்கர், ஜெர்மனிக்கு சமிபத்தில் அகதியாக வந்து, பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலிஸார், அல்பக்கரை லெய்ப்சிக் நகரில் கைது செய்துள்ளனர்.

தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று, கெம்னிட்ஸ் நகரில் இருக்கும் அல்பக்கரின் வீட்டில் போலிஸார் சோதனை நடத்தினார்; அங்கு அவர்கள் 400 கிராம் வெடிபொருட்களை கைப்பற்றினர் மேலும் மற்றொரு நபரையும் கைது செய்தனர்.

அல்பக்கர், பெர்லினில் உள்ள ஒரு விமான நிலையத்தை இலக்கு வைத்திருக்கலாம் என்று ஜெர்மானிய ஊடகங்கள் செய்தி வெளியுட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்