சிரியாவில் அமையவிருக்கும் ரஷியாவின் நிரந்தர விமானதளம்

படத்தின் காப்புரிமை Getty Images

சிரியாவின் டார்டஸில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிறுவும் திட்டம் ஒன்றை ரஷியா அறிவித்துள்ளது; சிரியாவில் இருக்கும் விமானதளங்களை நிரந்தரமாக்கப் போவதாக கடந்த வாரம் ரஷியா அறிவித்திருந்தது.

டார்டஸ் நகரம் ஊடாக மட்டுமே, மத்திய தரைக்கடலுக்கு ரஷியா செல்வதற்கான பாதையுள்ளதால் அதை வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல்களுக்கான எதிர் அமைப்புகள், அதிகப்படியான போர் கப்பல்களை நிறுத்துவதற்கான இடம் என அனைத்தும் கொண்டதாக விரிவாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் ரஷியா எஸ்-300 என்ற தரையிலிருந்து வானுக்குச் சென்று தாக்கும் ஏவுகணையை டார்டஸில் நிறுவியது.

சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் நோக்கில் தனது இருப்பை வைத்துக்கொள்ள ரஷ்யா எண்ணியுள்ளதை இந்த நடவடிக்கை குறிப்புணர்த்துவதாக பிபிசியின் மாஸ்கோ செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்