நைஜீரியா: முக்கிய ஷியா குழுவை சேர்ந்த பேச்சாளரை கைது செய்ய உத்தரவு

நைஜீரியாவில் உள்ள முக்கிய ஷியா குழுவை சேர்ந்த பேச்சாளரை கைது செய்ய அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கடந்த வாரம் நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தை கடுனா மாகாணத்தின் ஆளுநர் தடை செய்திருந்தார்.

கடுனா மாகாணத்தில் அந்த இயக்கத்தின் பெரும்பாலான விசுவாசிகள் இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பிபிசியிடம் பேசிய பேச்சாளர் இப்ராஹிம் மூஸா, போலிசாரிடம் தான் சரண் அடைய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் அந்த இயக்கத்தை சேர்ந்த சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த இயக்கத்தின் தலைவர் இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இஸ்லாமிய இயக்கம் தெரிவித்துள்ளது.