சூறாவளி தாக்கிய வட கேரொலைனாவிற்கு மத்திய நிதி வெளியிட ஒபாமா அவசர அறிவிப்பு

சூறாவளி மேத்யூவால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மின்சார இணைப்பு துண்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் உள்ள வடகேரொலைனா மாநிலத்திற்கு மத்திய நிதியை வெளியிட அவசர அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images)

வடகேரொலைனாவில் திங்களன்று வானம் தெளிவாக இருந்தபோதிலும், சூறாவளி மேத்யூவினால் அதீதமாகப் பெய்த 40 சென்டிமீட்டர் மழை, கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்கியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மில்லியன் மக்களுக்குத் தேவையான மின் இணைப்புகளைச் சரிசெய்ய அவசர மின்சார சேவை குழுக்கள் வேலை செய்து வருகின்றன