குடியேறிகள் பிரச்சனை: ஆப்ரிக்க ஒன்றிய உதவியை நாடும் மெர்க்கெல்

ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் தனது மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்தின் இறுதிக் கட்டமாக, எத்தியோப்பியாவிற்கு வந்தடைந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Thomas Lohnes/Getty Images
Image caption குடியேறிகள் பிரச்சனைக்கு ஆப்ரிக்க ஒன்றிய உதவியை நாடும் ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்க்கெல் (கோப்புப்படம்)

அரசியல் அமைதியின்மையைச் சமாளிக்க, அடிஸ் அபாபா அரசாங்கம் ஆறு மாதத்திற்கு அவசரகால நிலையை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு மெர்க்கெல் அங்கு விஜயம் செய்கிறார்.

ஐரோப்பாவின் இடம்பெயர்வு நெருக்கடிக்கு தீர்வு காண அழுத்தத்தில் உள்ள மெர்க்கெல், சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறுவதைத் தடுக்க ஆப்பிரிக்க தலைவர்களின் உதவி வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைநகரான அடிஸ் அபாபாவில் ஒரு புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜெர்மானிய தலைவர் கலந்து கொள்ள இருக்கிறார்.