பிரேசில்: குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள செல்வந்த பகுதிகளில் சிலவற்றில் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கிய துப்பாக்கி சூட்டில், குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் குழுவைச் சேர்ந்த குறைந்தது மூன்று உறுப்பினர்களை அந்நாட்டு போலீஸார் கொன்றுள்ளனர்.

Image caption பிரேசில் போலீசார் (கோப்புக் காட்சி)

இச்சம்பவத்தால், இப்பகுதிகளில் உள்ள பல கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் கோப்புகபானா பகுதி

சுற்றுலாவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கோப்புகபானா மற்றும் இப்பனேமா ஆகிய இடங்களின் புறநகர்ப் பகுதிகளை, பார்க்கக்கூடிய தொலைவில் உள்ள ஒரு குடிசை நகரத்தில் போதை மருந்து கடத்தலை நடத்தி வரும் ஒரு சக்தி வாய்ந்த குழுவைச் சேர்ந்த பல உறுப்பினர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பிரமிப்பூட்டும் காட்சி, சந்தேகிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், போலீஸாரால் சுடப்பட்டப் பிறகு, ஒரு மலைப் பகுதியில் இருந்து விழுவதை காண்பித்துள்ளது.