துக்க நாளில் கால்பந்து போட்டி: இரான் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தடை

இன்றிரவு 8.15 மணிக்கு (இந்திய நேரப்படி )தென் கொரிய அணிக்கு எதிராக இரானின் தேசிய கால்பந்து அணி விளையாடவுள்ள உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டம் இரானின் மதத் தலைவர்களுக்கு சில அசாதாரண சவால்களை அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இமாம் ஹுசைன்

ஷியா முஸ்லீம் மதப்பிரிவின் நாள்காட்டியில் உள்ள புனிதமான நாட்களில் ஒன்றில் தெஹ்ரானில் இந்தப் போட்டி நடக்கவுள்ள நாள் அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை LUIS ROBAYO / AFP
Image caption இரான் கால்பந்து அணி (கோப்புப் படம்)

இதனால், போட்டி நடைபெறும் இன்று, ஏழாம் நூற்றாண்டில் காலமான ஷியா மதப்பிரிவின் தியாகியாக கருதப்படும் இமாம் ஹுசைனின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில், இருநாட்டு விளையாட்டு வீரர்களும் கருப்பு நிற கைப்பட்டைகளை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டி நடக்கும் மைதானத்தில் துக்கத்தை அனுசரிக்கும் விதமாக கறுப்பு நிற கொடிகள் பறக்கும்.

மேலும், இரான் நாட்டு ரசிகர்கள் தங்களின் தேச அணிக்கு அளிக்கும் வழக்கமான உற்சாக கரகோஷத்தை இன்று விளக்கி வைத்து, அதற்கு பதிலாக ''யா ஹுசைன்'' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்