காணாமல் போன 50 நாக பாம்புகளை தேடும் சீன அதிகாரிகள்

உரிமம் பெறாத பாம்புப் பண்ணை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட விஷதன்மையுள்ள 50 நாக பாம்புகளை பிடிக்க சீனாவின் கிழக்கு பகுதி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை bradmoon
Image caption பண்ணை வீட்டில் இருந்தோரை நாக பாம்பு ஒன்று பயமுறுத்தியதால் பிரச்சனை ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 200-க்கு மேலான நாக பாம்புகள் அந்த பண்ணையிலிருந்து நழுவிவிட்டன.

பண்ணையிலிருந்து தப்பிய அந்த பாம்புகள் அனைத்தையும் ஆட்சியாளர்களிடம் தகவல் அளிக்காமலேயே பிடிக்க முயல்வதாக பண்ணையின் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை yasunorikoidewikimedia
Image caption ஆகஸ்ட் மாதம் 200-க்கு மேலான நாக பாம்புகள் காணாமல் போய்விட்டன

இந்த நாக பாம்புகளில் ஒன்று உள்ளூர் பண்ணை வீட்டில் புகுந்துவிட்டது. அதில் வசிப்போர் பயந்து நடுங்கியை அடுத்து, இந்த விடயம் பொது பிரச்சனை ஆகியிருக்கிறது.

தப்பியோடிய எல்லா பாம்புகளையும் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அவற்றில் ஏதாவது குடியிருப்புவாசிகளை கடித்துவிட்டால் முன்னேற்பாடாக அதிக விஷமுறிவு மருந்துகளை இருப்பு வைத்திருப்பதாக கூறி குடிமக்களுக்கு உள்ளூர் அரசு உத்தரவாதம் வழங்கி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்