சக கட்சி உறுப்பினர்களை சாடும் டிரம்ப்

தன்னுடைய சக குடியரசு கட்சி உறுப்பினர்கள் மீது கடும் டிவிட்டர் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குடியரசு கட்சியின் வேட்பாளருக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதில்லை என்று பால் ரையான் தெரிவித்திருக்கிறார்

அவர்களை விசுவாசமில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கின்ற குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான டிரம்ப், அவர் மீதான அவர்களின் தாக்குதல், போட்டியாளர் ஹிலரி கிளிண்டனை விட அதிக கஷ்டத்தை குடியரசு கட்சியினருக்கு உருவாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.

முன்னதாக, நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரயானை மிகவும் பலவீனமான, செயல்திறனற்ற தலைவர் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

குடியரசு கட்சியின் வேட்பாளருக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் மாறாக நாடாளுமன்றத்தில் கட்சியின் பெரும்பான்மையை பாதுகாப்பதற்காக உழைக்கப் போவதாகவும் திங்கள்கிழமை ரயான் தெரிவித்தார்.

பெண்களை முறைதவறி விமர்சித்திருந்த டிரம்பின் காணொளி பதிவு வெளியானதிலிருந்து, அவர் பற்றிய தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்