கால்பந்து அணிக்கு உற்சாகமூட்டுவதை விலக்கி, துக்கநாள் அனுசரிக்கும் இரான்

தெஹரானிலுள்ள அஸாடி விளையாட்டு மைதானத்தில் உலக கோப்பை தகுதி சுற்று விளையாட்டை தேசிய கால்பந்து அணி ஆட உள்ள நிலையில், இரான் ஷியா இஸ்லாமில் உள்ள துக்க நாளை அனுசரிப்பதற்காக, இரானின் அனைத்து செயல்பாடுகளும் ஏறத்தாழ நிறுத்தப்பட்டுள்ளன,

படத்தின் காப்புரிமை AFP

மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தடை செய்திருக்கும் பாரம்ரிய நாளில் நடைபெறுகின்ற, தென் கொரிய அணிக்கு எதிராக இந்த போட்டி, இரானின் மதத் தலைவர்களுக்கு சில அசாதாரண சவால்களை வழங்கியுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் ஷியா முஸ்லிம் பிரிவுக்காக கொல்லப்பட்ட தியாகி இமாம் ஹுசைனின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில், தன்னிகரற்ற தலைவரின் இராட்சத பதாகைகளின் கீழ், தலைக்கு மேல் பெரிய கறுப்பு கொடிகளோடு ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர்.

இரான் நாட்டு ரசிகர்கள் தங்களின் தேச அணிக்கு அளிக்கும் வழக்கமான உற்சாக கரகோஷத்தை இன்று விலக்கி வைத்து, அதற்கு பதிலாக ''யா ஹுசைன்'' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்