சட்டவிரோத மீன்பிடிப்பு: சீனாவுக்கு தென் கொரியா எதிர்ப்பு

தென் கொரிய கடற்படைக்கும் சீன மீன்பிடி படகுகளுக்கும் நடந்த சமீபத்திய மோதலை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக அதிகாரப்பூர்வ எதிர்ப்பை தென் கொரியா பதிவுசெய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சீன மீன்பிடி படகு ஒன்று தென் கொரியாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, தென் கொரியாவின் கடலோரக் கப்பல்களில் ஒன்றின் மீது மோதி அதனை கடலில் மூழ்கடித்துவிட்டது என தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அமைதியை வலியுறுத்துவதாகவும் சீனா தெரிவித்துள்ளது

கடந்த மாதம் தென் கொரிய கடலோரக் காவற்படை மாலுமிகளால் சீன மீனவர்களின் படகில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் தீப்பிடித்து, மூன்று சீன மீனவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்