பிலிப்பைன்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க வருகிறது தடை

படத்தின் காப்புரிமை Getty Images

பிலிப்பைன்ஸில், இந்த மாத இறுதிக்குள் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்யும் திட்டம் ஒன்றை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்த திட்டத்தை அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் அதற்கு ஒப்புதல் வழங்குவார் என்று நம்புவதாகவும் சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

98 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் தொகையை கொண்ட பிலிப்பைன்ஸில், 38 சதவீத பெரியவர்கள் புகைபிடிப்பவர்களாக உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகையிலை வியாபாரிகளுக்கான மாற்று பணி மற்றும் பிரத்யேக புகைபிடிக்கும் பகுதிகள் என்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.