'நம்பகத்தன்மை நெருக்கடியில்' சாம்சங் நிறுவனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'நம்பகத்தன்மை நெருக்கடியில்' சாம்சங் நிறுவனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அதன் கேலக்ஸி நோட் 7 வகை மொபைல் தொலைபேசியிலுள்ள பேட்டரி வெடித்துத் சிதறியதை அடுத்து, சந்தையிலிருந்து 25 லட்சம் தொலைபேசிகள் திரும்பப் பெறப்பட்டன.

ஆனால் மாற்றிக்கொடுக்கப்பட்ட தொலைபேசியிலும் அதே பிரச்சனை.

இதையடுத்து தனது அதிநவீன தொலைபேசியான கேலக்ஸி நோட் 7 தயாரிப்பை முற்றாக நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது சாம்சங்.

ஆனால் அதன் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனமோ கமுக்கமாக உள்ளது. இப்பிரச்சனை குறித்து ஆப்பிள் இதுவரை எக்கருத்தையும் வெளியிடவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சாம்சங்கின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்சார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.