கிரைமியாவை இணைக்கும் பாலம்; 350 கோடி செலவிடும் ரஷ்யா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரைமியாவை இணைக்கும் பாலம்; 350 கோடி டாலர் செலவிடும் ரஷ்யா

ரஷ்யாவுடன் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரைமியாவில் 19 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிரமாண்டமான பாலம் ஒன்றை ரஷ்யா கட்டுகிறது.

சுமார் 350 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுக்ரேனிடமிருந்து கிரைமியாவை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா, தனது நாட்டுக்குள் கட்டப்பட்ட பாலங்களுக்கு இதுவரை செலவிடாத மிகப்பெரிய தொகையை இந்த பாலத்திற்காக செலவிட்டு வருகிறது.

கிரைமியாவின் துறைமுக நகரான கெர்சுக்கு கருங்கடல் வழியாக இந்த பாலம் கட்டப்படுகிறது.