சிரியாவில், ஐ.எஸ் அமைப்பிலிருந்து வெளியேறிவர்களுக்கான முகாம்

ஜெய்ஷ் அல் தஹ்ரிர் என்ற சிரியா கிளர்ச்சிக் குழு, நாட்டின் வட பகுதியில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து வெளியேறிய டஜன் கணக்கான நபர்களை வைத்திருக்கும் ஒரு முகாமை அமைத்துள்ளது என்று பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை OMAR HAJ KADOUR/AFP/Getty Images
Image caption இட்லிப் மாகாணத்தின் ஒரு பகுதி (கோப்புப்படம்)

இட்லிப் மாகாணத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த பல கைதிகள் அவர்களின் குடும்பங்களோடு அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைதிகள் ஷரியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள் என்றும் சிலருக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று ஜெய்ஷ் அல் தஹ்ரிர் குழுவின் தளபதி,பிபிசியிடம் கூறினார்.

மற்ற கைதிகள், பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு, ஐரோப்பாவிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்குச் சிறை தண்டனை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.