ஹாங்காங்கின் உள்ளூர் சட்டசபையின் புதிய கூட்டத் தொடரில் நிலவிய அமளி

ஹாங்காங்கின் உள்ளூர் சட்டசபையின், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும் இடத்தில், புதிய கூட்டத் தொடர் தொடங்கும் வேளையில், அமளி நிலவியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹாங்காங்கின் உள்ளூர் சட்டசபைக் கூட்டம்

தங்கள் பிரதேசத்தில் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கிற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க பல புதிய உறுப்பினர்கள் இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ''ஹாங்காங் சீனா அல்ல'' என்று கூறி கொடிகளைக் காட்டினர்.

மற்றொரு உறுப்பினர், மெதுவாகத் தனது உறுதிமொழியைப் படித்து தனது எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

மற்றவர்கள் "சீனா" என்ற வார்த்தையைத் தவறாக உச்சரித்தனர்.

சில புதிய சட்டமன்ற உறுப்பினர்கள், ஹாங்காங்கிற்கு கூடுதலான சுயாட்சி அதிகாரத்தைச் சீனா தரவேண்டும் என்றும் அல்லது சுதந்திரத்தை தர வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.