தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டின் உடல்நிலை குறித்து அதிகரிக்கும் கவலைகள்

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டின் உடல்நிலை குறித்து கவலை அதிகரித்து வருவதற்கு மத்தியில், பிரதமர், ப்ரயுத்- சான்-ஓச்சா, திட்டமிடப்பட்ட தனது அலுவல்களை ரத்து செய்துவிட்டு பாங்காக்கிற்கு திரும்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Athit Perawongmetha/Getty Images
Image caption தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட்டின் உடல்நிலை கவலைக்கிடம் ?

முடிக்குரிய இளவரசர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தையைப் பார்க்க தாய்லாந்திற்கு விமானத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசரின் உடல்நிலை உறுதியற்ற நிலையில் உள்ளது என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதில் இருந்து, மருத்துவமனைக்கு வெளியில் அரசரின் நலம் விரும்பிகள் கூட்டமாக கூடியுள்ளனர்.

உலகின் மிக நீண்ட கால மன்னராக உள்ள இந்த அரசர் 1946ல் அரியணை ஏறினார்.