வட இராக்கில், டிரோன் விமானம் மூலம் ஐ.எஸ். கடும் தாக்குதல்

வெடிக்கும் சாதனத்தைக் கொண்ட, ஒரு டிரோன் விமானத்தைப் பயன்படுத்தி கடும் தாக்குதலை வட இராக்கில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தியதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரில் தாக்குதலுக்கு தயாராகும் குர்து படைகள்

இந்தத் தாக்குதலில், தங்களது படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை குர்து அதிகாரிகள் உறுதி செய்தனர் மற்றும் பிரெஞ்சு படையைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

வெடிக்கும் சாதனத்தைக் கொண்ட அந்த டிரோன் தரையில் விழுந்ததும் அதை படையினர் எடுத்த போது, அது வெடித்து சிதறியது.

உளவு தகவல்களைச் சேகரிக்க தூரத்திலிருந்து மூலம் கட்டுப்படுத்தப்படும், சிறிய விமானங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பரந்த அளவில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அவர்கள் இந்த வகையான விமானத்தைப் பயன்படுத்தி அபாயகரமான தாக்குதலை நடத்தியது இது தான் முதல் முறை என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.