சிரியாவின் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் 15 பேர் பலி

சிரியாவின் கிழக்கில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றில் நடந்த விமானத் தாக்குதல் காரணமாகக் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை AMEER ALHALBI/AFP/Getty Images)
Image caption சிரியாவின் அலெப்போ நகரத்தில் தொடரும் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்

இறந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்து வரும் வான் தாக்குதல்களில் இது நடந்தது.

சிரியா அரசாங்கம் மற்றும் ரஷியாவின் போர் விமானத் தாக்குதல்களில் ஒரு சிறிய இடைவெளி இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை, அது மீண்டும் தொடங்கியதில், சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்