நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது?

ஆட்கடத்தலுக்கு எதிரான உலகப் போராட்டத்துக்கு பிரிட்டன் தலைமை ஏற்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேஸா மே கூறியுள்ளார்.நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க பிரிட்டன் ஓய்வின்றி உழைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் பத்தாயிரம் பேராவது பிரிட்டனுக்குள் கடத்தி கொண்டுவரப்பட்டு, பாலியல் தொழிலிலும், வீட்டு அடிமைகளாகவும் தள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. பாலியல் அடிமைகளாக கடத்தப்படுதல் பரவலாக நடக்கும் ரொமானியா உட்பட சில நாடுகளில் இருந்தே இவர்களில் பலர் கடத்தப்படுகிறார்கள். ரொமானியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு.