பெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான , குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப், தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர், டொனால்டு டிரம்ப் (கோப்புப்படம்)

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்பு, விமானத்தில் தனது பாவாடைக்குள் கையை வைக்க முயற்சி செய்தார் என்று கூறினார்.

மற்றொரு பெண், 2005ல் தான் பத்திரிகையாளராக இருந்தபோது, ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் இல்லத்திற்குச் சென்றபோது, அவர் தன் மீது வலுக்கட்டாயமாக நெருங்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், டிரம்ப், தான் பெண்களை அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தொடுவு பற்றி பேசியதாகக் காட்டும் ஒளிநாடாப் பதிவுகள் எல்லாமே சில ஆண்கள் தனிப்பட்ட நிலையில் இருக்கும்போது பேசும் பேச்சுக்கள்தான் என்று வலியுறுத்தினார்.

அவரது பிரச்சார குழு எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளது.