நைஜீரியாவில் கடத்தப்பட்ட சிபொக் பள்ளி மாணவிகளில் 21 பேர் விடுவிப்பு

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால் சிபொக் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், கடத்தப்பட்டவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், பக்கசார்பற்ற வகையில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பெண்கள் நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைடுகுரியில் உள்ள பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப் பெண்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதை அதிகாரிகள் கூறவில்லை.

போகோ ஹராமின் கோட்டையாகக் கருதப்படும் சம்பிஸா காட்டில் தற்போது நைஜீரியா ராணுவம் பெரியளவிலான நடவடிக்கை ஒன்றை நடத்தி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபொக்கில் உள்ள பள்ளியிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவிகளை இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போகோ ஹராம் கடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்