அலெப்போ: வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தகவல்

சிரியா நகரமான அலெப்போவில் போராளிகள் வசமிருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட மேலும் பல வான்வழித்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image caption கோப்புப்படம்

அலெப்போவில் சிரியா அரசாங்கம் நடத்திவரும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அதனால் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு தனது நாடு வருத்தம் தெரிவிப்பதாக ரஷ்யாவுக்கான ஐ.நா தூதர் விட்டலி சர்கின் பிபிசி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Image caption கோப்புப்படம்

அல்-கயீதாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளை மட்டுமே ரஷ்யா குறிவைத்து வருகிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு அலெப்போவில் உள்ள பள்ளி ஒன்றில் கிழக்கிலிருந்த போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.வல்

தொடர்புடைய தலைப்புகள்