அரசர் பூமிபோனின் வாழ்க்கையின் சில தருணங்கள் (புகைப்படத் தொகுப்பாக)

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட், உலகின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த அரசர், அதிக அளவு ராணுவ ஆட்சி கவிழ்ப்புகளையும், 17 சட்டசபைகளையும், அதற்கும் மேலான பிரதமர்களையும் சந்தித்த நாட்டில் நீடித்த செல்வாக்கு பெற்றவர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 1935 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அப்போதைய இளவரசரும் தற்போதைய அரசரும் ஆன பூமிபோன் அடூன்யடேட் மற்றும் அவரது சகோதரர் இளவரசரும் முன்னாள் அரசரும் ஆன அனந்தா, ஸ்விட்சர்லாந்தின் லாசேனில் உள்ள பள்ளியில்

பாங்காங்கின் ராஜ அரண்மனையில் விவரிக்க முடியாத துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சகோதரரும் அரசரும் ஆன அனந்தா மஹிடோல் மரணமடைந்த பிறகு அரசர் பூமிபோன் அடூன்யடேட், ஆட்சிக்கு வந்தார்

படத்தின் காப்புரிமை AP
Image caption ஸ்விட்சர்லாந்தில், அரசர் பூமிபோன் அடூன்யடேட் மற்றும் தான் மணந்து கொள்ளவிருக்கும் இளவரசி சிரிகிட். தங்களது நிச்சயதார்த்த அறிவிப்பின் போது

அரசர் பூமிபோன் அடூன்யடேட் , அமெரிக்காவின் மேசசூசெட்ஸ், கேம்பிரிட்ஜில் பிறந்தார், அங்குதான் அவரின் தந்தை படித்துக் கொண்டிருந்தார், பின்னர் அவர் ஸ்விட்சர்லாந்தில் கல்வி கற்றார். அவர் தனது மனைவி இளவரவி சிரிகிட்டை ஐரோப்பாவில் சந்தித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 1955 ஆண்டு தாய்லாந்தின் ராஜ குடும்பம் பாங்காக் சிற்ரல்டா அரண்மனையில் அமர்ந்து புகைப்படத்திற்காக போஸ் கொடுத்த சமயத்தில்

இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். ஆனால் இளவரசர் வாச்சிரலாங்கோன் மற்றும் இளவரசி உபோல் ரடனாவுடன் இந்த புகைப்படம் 1955 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 1932ல் முழுமையான முடியாட்சி அகற்றப்பட்ட பிறகு மன்னராட்சி சரிவை சந்தித்தது. 1935 ஆம் ஆண்டு பூமிபோனின் உறவினர் பிரஜதிபோக் துறவை மேற்கொண்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்க அதிபர் ட்வைட் ஐசன்ஹோவருடன் பூமிபோன் மற்றும் அவரது மனைவி

மாகாணங்களில் அவர் மேற்கொண்ட அடுத்தடுத்த பயணங்கள், விவசாய வளர்ச்சியில் அவரின் வாழ்நாள் அக்கறையை பறைசாற்றும் பல அரச திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அரசர் பூமிபோன் அரசருக்கான கடமைகளை மறு கட்டமைப்பு செய்தார்.அவர் பல உலக தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தில் வாஷிங்டனில் விஜயம் மேற்கொண்ட போது அமெரிக்க அதிபர் ட்வைட் ஐசன்ஹோவருடன் பூமிபோன்.

படத்தின் காப்புரிமை PA
Image caption 1960 ஆம் ஆண்டு அரசர் பூமிபோன் ராணி எலிசபத்துடன், தனது லண்டன் பயணத்தின் தொடக்கத்தின் போது விக்டோரியாவிலிருந்து பங்கிங்காம் அரண்மனைக்கு சென்றபோது

இதில் 1960ஆம் ஆண்டு லண்டனில் ராணி எலிசபத்துடன்.

படத்தின் காப்புரிமை AP

பதில் பயணமாக 1972 ஆம் ஆண்டு ராணி எலிசபத், தாய்லாந்திற்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டார்

படத்தின் காப்புரிமை AP
Image caption பூமிபோன் அடூன்யடேட் , தாய்லாந்து அரசர்,1972

தாய்லாந்தின் குழப்பமான அரசியலில் பூமிபோனின் முதல் வெளிப்படையான தலையீடு 1973ல், ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிப்பாய்கள் சுட்டபோது வந்தது. சுடப்பட்ட பொதுமக்கள் அரண்மனையில் புகலிடம் பெற அனுமதிக்கப்பட்டனர். அரசரின் இந்த நடவடிக்கை அப்போதைய பிரதமர் ஜெனரல் தானோம் கிட்டிகச்சோனின் அரசு கவிழ வழிவகுத்தது.

படத்தின் காப்புரிமை AP
Image caption வட தாய்லாந்தில் 1981 ஆம் ஆண்டு அரசர் பூமிபோன் ஜெனரல் ப்ரேம் டினசுலானனுடன் நீர்பாசன திட்டத்தை பார்வையிட்ட போது

1981ல் , மன்னர் பூமிபோன், தனது நெருங்கிய நண்பரும், பிரதமருமான, ஜெனரல் ப்ரேம் டின்சுலனோண்டுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு செய்த ராணுவ அதிகாரிகள் குழு ஒன்றுக்கு எதிரான நிலைப்பாட்டை மன்னர் எடுத்து, அவருக்கு விசுவாசமான படைப் பிரிவுகள் பாங்காக்கை மீண்டும் கைப்பற்றின.

படத்தின் காப்புரிமை AP
Image caption அரசர் பூமிபோன் அடூன்யடேட் முடிய சூடிய இளவரசர் வாச்சிராலாங்கவுனடனும், பிற தாய் இசை கலைஞர்களுடன்

புகைப்பட கலை, பாட்டு பாடுதல், சாக்ஸஃபோனிற்கான பாடல்களை உருவாக்குதல், ஓவியம், எழுத்து போன்ற பல கலைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.இந்த புகைப்படத்தில் முடிய சூடிய இளவரசர் வாச்சிராலாங்கவுனடனும், பிற தாய்லாந்து இசை கலைஞர்களுடன்

படத்தின் காப்புரிமை AP
Image caption பொன்விழாவின் போது அரசர் பூமிபோன் அடூன்யடேட் தனது ராஜ உரையை கொடுக்க தயாரான போது

பிரதமர் தக்ஸின் ஷினவாட்ராவின் தலைமையை குறித்து எழுந்த நெருக்கடியில் தலையிடுமாறு தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்ட போதும் அது பொருத்தமற்றதாக இருக்கும் என கூறி மறுத்துவிட்டார்.அந்த ஆண்டு தாய்லாந்து அவரது பொன்விழாவை கொண்டாடியது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பிரமாண்ட அரண்மனைக்கு வெளியில் உள்ள ராஜ மைதானத்தில் தாய்லாந்து மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிய போது

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் தாய்லாந்து அரசர் பூமிபோனின் 80வது பிறந்தநாளை தாய்லாந்து கொண்டாடியது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெரிய ப்ரோஜக்டரில் தாய்லாந்து அரசரின் படம் காண்பிக்கப்பட்ட போது.