தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார் : காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார் : காணொளி

உலகின் மிக நீண்ட முடியாட்சியான தாய்லாந்தின் மன்னர் பூமிபோன் அடூன்யடேட்கா லமானதாக தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது.

பல வருடங்களாக சுகவீனமுற்றிருந்த மன்னரின் உடல்நிலை அண்மைய நாட்களாக மோசமடைந்து வந்தது.

அறிவிப்பு வெளியான போது அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் கண்ணீர் வடித்து அழுதார்கள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஆறாம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வந்த எண்பத்தியெட்டு வயதான மன்னர் தாய்லாந்தின் ஒருமைப்பாட்டு சக்தியாக பார்க்கப்பட்டார்.