தனது வெற்றியைத் தடுக்கும் பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட நபர் தான் என்கிறார் டிரம்ப்

டொனால்டு டிரம்ப் ,தான் , அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வெற்றியைத் தடுப்பதற்கான ஒரு தீய பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Ty Wright/Getty Images)
Image caption பிரசாரத்தால் பாதிக்கப்பட்டவன் நான் -- டொனால்டு டிரம்ப் (கோப்புப்படம்)

புளோரிடா மற்றும் ஓஹையோவிலும் நடந்த ஊர்வலங்களில் பேசிய ட்ரம்ப், பல பெண்களால் எழுப்பப்பட்ட, அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தொட்டு, மோசமாக நடந்து கொண்டது மற்றும் அவர்களை முத்தமிட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகத் தெரிவித்தார்.

குற்றம் சாட்டியவர்களில் சிலரைத் தான் சந்தித்ததில்லை என்று அவர் கூறினார்.

அதிபர் தேர்தலுக்கு, ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் உள்ள நிலையில், டிரம்ப் தன்னுடைய போட்டியாளர் ஹிலரி கிளின்டனை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

முன்னதாக, அமெரிக்க முதல் பெண்மணி, மிஷெல் ஒபாமா, உணர்ச்சிப்பூர்வமான தாக்குதலை டொனால்டு டிரம்ப் மீது தொடுத்தார்.

பெண்களை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தொட்டதாக அவர் பெருமை பொங்க பேசியதைக் காட்டும் காணொளிக் காட்சியில் வந்த கருத்துக்கள் அதிர்ச்சியானதாகவும், இழிவானதாகவும் உள்ளதாக மிஷேல் ஒபாமா கூறினார்.