எதிர்ப்பை காட்ட யுனெஸ்கோ நிதி ஆதரவை நிறுத்திய ஜப்பான்

1937 ஆம் ஆண்டு நான்ஜிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனத்திற்கு வழங்குகின்ற நிதி ஆதரவை ஜப்பான் நிறுத்தி வைத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Xinhua
Image caption இரண்டாவது சீன தேசிய நான்ஜிங் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு

இரண்டாம் உலகப் போரின்போது, முன்னாள் சீனாவின் தலைநகரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஜப்பான் படையினர் கொன்று குவித்தனர்.

ஆனால், நான்ஜிங் பாலியல் வல்லுறவு என்று அறியப்படும் இந்த படுகொலை பற்றி பெரிதாக பேசப்படுவதை ஜப்பான் விரும்புவதில்லை.

எனவே, அது பற்றிய ஆவணங்கள் யுனெஸ்கொவில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, அவற்றை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஜப்பான் கோபமடைந்துள்ளது.

சீனாவில் ஜப்பான் நடத்திய போர்கால அட்டூழியங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இப்போதும் கசப்புணர்வை வெளிப்பட வைக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்