மலடாக்காமல் பாலின மாற்றம்: பிரான்சில் புதிய சட்டம்

ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் திருநங்கைகளை மலடாக்காமலேயே அவர்களின் சட்டப்பூர்வ பாலின தகுநிலையை மாற்றி கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் பிரான்ஸின் புதிய சட்டத்தை ஐரோப்பிய ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் மாற்று திருநங்கைகள் செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரான்ஸிலுள்ள ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் திருநங்கைகளின் அழுத்தங்களை தொடர்ந்து இந்த புதிய சட்டம் வந்துள்ளது

புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், மீள முடியாத மலடாக்கப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லாமலேயே, நீதிமன்றத்தில் தங்களின் சட்டப்பூர்வ பாலின தகுநிலையை மாற்றிகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

மலடாக்கி கொள்ளும் வெட்கக்கேடாக பழக்கத்தில் இருந்து பிரான்ஸ் தெளிவான முன்னேற்றத்தை கண்டிருப்பதாக ஐரோப்பிய ஒரு பாலுறவுக்காரர்கள் என்ற செயற்பாட்டாளர் குழு தெரிவித்திருக்கிறது.

பல இலட்சக்கணக்கான திருநங்கைகள் பிரான்சிஸ் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் இல்லை.

தொடர்புடைய தலைப்புகள்