ஐரோப்பாவுக்கு அப்பால் முதல்முறையாக இயேசு சபையின் தலைவர் தேர்ந்தெடுப்பு

ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள் காணப்படும் துறவற சபைகளில் மிகவும் பிரபலமான ஒன்றான இயேசு சபையினர் ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து முதல்முறையாக தங்களுடைய உலக தலைவரை தேர்தெடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து தலைமை பீடத்தை எதிர்பார்க்கிறது என்பதற்கான இன்னொரு அடையாளம் இது

வெனிசுவேலாவை சேர்ந்த பாதிரியார் அல்வாரோ சோசா அபாஸ்கல் இயேசு சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரோமில் கூடிய 200-க்கு அதிகமான இயேசு சபை வாக்காளர்களால், "மர்முரோஷியோ" அல்லது இரகசிய பேச்சு என்று அறியப்படும் நான்கு நாள்கள் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாதிரியார் சோசா அபாஸ்கல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, பல ஆண்டுகள் இயேசு சபை பாதிரியாராக இருந்த போப் பிரான்சிஸால் வரவேற்கப்படும் என்றும், ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து தலைமை பீடத்தை எதிர்பார்க்கிறது என்பதற்கான இன்னொரு அடையாளம் இது என்றும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்