வங்கதேசம் - சீனா இடையே 20 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்து

வங்கதேசத்தில் முப்பது ஆண்டுகள் கழித்து முதன் முறையாக சீன அதிபர் ஒருவரின் வருகையின் போது, சீனா மற்றும் வங்கதேசம் இடையே சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேய்க் அசீனா ஆகியோரின் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதில், பெரும்பாலானவை சீன நிதி உதவியுடன் வரும் கட்டுமான திட்டங்களாகும்.

பண்டைய வர்த்தக பாதைகளை மீண்டும் நிறுவும் பெய்ஜிங்கின் லட்சியத்தில், வங்கதேசம் சீனாவின் தவிர்க்க முடியாத கூட்டாளி என ஷி ஜின்பிங் வர்ணித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்