பெர்லின் தாக்குதல் திட்டம்: இஸ்லாமியவாத மதகுரு மீது சிரிய அகதியின் சகோதரர் குற்றச்சாட்டு

பெர்லின் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட சிரியா அகதி, ஜெர்மன் தலைநகரத்தில் உள்ள இஸ்லாமியவாத போதகரால் தீவிர உணர்வுமிக்கவராக மாற்றப்பட்டதாக அவருடைய சகோதரர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லெயிப்ஸிக் சிறைச்சாலை

டேர் ஷ்பீகல் என்ற நாளிதழுக்கு அவருடைய சகோதரர் அளித்துள்ள பேட்டியில், ஜபர் அல் பக்ர் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து தப்பி வந்து ஜெர்மனியில் வசித்த போது இஸ்லாமிய மதகுரு ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவிற்கு மீண்டும் திரும்ப ஜபர் மதகுருவால் ஊக்கப்படுத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு அங்கு ஐ.எஸ் ஜிஹாதிகள் அவருக்கு பயிற்சி வழங்கியதாகவும் ஜபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஜபர் ஜெர்மனியில் தஞ்சம் பெற முயன்றதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, லெயிப்ஸிக்கில் உள்ள சிறைச்சாலையில் தன்னுடைய கழத்தை தானே நெரித்து தற்கொலை செய்து கொண்டார் ஜபர்.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலரை பற்றி கண்டறிய மிகவும் நம்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்