அமெரிக்க வரலாற்றில், அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் நான்: டொனால்ட் டிரம்ப்

பல பெண்கள் தன் மீது பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டியதற்குப் பின், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில், மோசமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் தான் எனப் புகார் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் இந்தத் தேர்தல் தில்லு முல்லு நிறைந்தது என்றார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் டிரம்ப் தன் மீது வலுக்கட்டாயமாக விழ முயன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டியவர்களில் ஒருவரான சம்மர் ஜெர்வோஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர், ஹிலாரி கிளின்டன் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டிருப்பதாகக்

குறிப்பிடுகின்றன