சிரியாவில் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக , ஜான் கெர்ரி, செர்கே லவ்ரோஃப் சந்திப்பு

சிரியாவில், கடந்த மாதம் ஒரு குறுகிய காலம் நடப்பில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இன்று சுவிட்சர்லாந்தில், அந்த ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோஃப் ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.

அவர்களோடு, துருக்கி, சௌதி அரேபியா, இரான் மற்றும் கத்தாரைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள்.

எந்தவித திருப்புமுனை ஏற்படும் எதிர்பார்ப்புகளை , ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் குறைத்துள்ளனர்.

சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததில் இருந்து, ரஷியாவின் வான் வழி தாக்குதலின் ஆதரவுடன், சிரிய அரச படைகள் அலெப்போ நகரத்தில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கின்றன.