இராக்கில் ஷியா முஸ்லிம்களின் கூடாரத்தில் தற்கொலை தாக்குதல்; 15 பேர் பலி

பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் ஒன்றுகூடியிருந்த ஒரு கூடாரத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இராக்கிலிருந்து வருகின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AF/Getty Images
Image caption துக்க சடங்கில் தற்கொலை குண்டு தாக்குதல் (கோப்புப்படம்)

குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இராக் தலைநகரின் வட பகுதி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இந்த கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு நடைபெற்ற ஏழாம் நூற்றாண்டில் முகமது நபிகளின் பேரன் ஹூசைன் கொல்லப்பட்டதை நினைவு கூர்கின்ற துக்க சடங்குகளில் பல ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்