லிபிய ராணுவத்தினரின் பாலியல் குற்றங்களுக்கு இழப்பீடு செலுத்திய பிரிட்டன்

பிரிட்டனில் பேர் பயிற்சி பெறுவதற்காக வந்த லிபிய ராணுவ பயிற்சி படையினர் நடத்திய பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு பல இலட்சக்கணக்கான டாலர் இழப்பீட்டை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செலுத்தியிருக்கிறது.

Image caption கேம்பிரிட்ஜ்க்கு அருகிலுள்ள படையினர் பயிற்சி தளம்

2014 ஆம் ஆண்டு முந்நூறுக்கும் மேலான லிபிய ராணுவ பயிற்சி படையினர் இங்கிலாந்தின் தென் பகுதிக்கு வந்தனர்.

கர்னல் கடாஃபியின் வீழ்ச்சிக்கு பின்னர் லிபியாவை ஸ்திரப்படுத்த உதவுவதற்கு உருவாக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் பகுதியாக அவர்கள் வந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Terry Harris
Image caption பாலியல் தாக்குதல்கள் வெளிவர தொடங்கிய பிறகு, அந்த படைப்பிரிவினர் முன்னதாகவே தாயகம் அனுப்பப்பட்டனர்.

ஆனால், அவர்களால் நடத்தப்பட்ட தொடர் பாலியல் தாக்குதல்களுக்கு பிறகு, பல மில்லியன் டாலர் செலவில் நடத்தப்படவிருந்த இந்த பயிற்சி கைவிடப்பட்டது.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்காக இருவர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிறர் பாலியல் தாக்குதல்களுக்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்