சிரியாவில் போர் நிறுத்தம் குறித்து சுவிஸில் அமெரிக்க, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை

கடந்த மாதம் சிரியாவில் குறுகிய காலமே நீடித்த போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் சுவிஸ் நகரமான லொசானில் நடைபெற உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த பேச்சுவார்த்தை மூலம் பெரிய திருப்பம் ஏர்படும் என்று ரஷ்யாவும், அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்செய் லெவ்ராஃப்விடம் பேச உள்ளார்.

துருக்கி, செளதி அரேபியா, இரான் மற்றும் கத்தாரிலிருந்து வந்திருக்கும் அமைச்சர்களுடன் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் பெரிய திருப்பம் ஏர்படும் என்று ரஷ்யாவும், அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.

காரணம், போர் உடன்படிக்கை முறிந்த பிறகு, அலெப்போ நகரில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில், ரஷ்ய வான்வழித்தாக்குதல்கள் ஆதரவுப் பெற்ற சிரியா அரசுப்படையினர் தங்கள் குண்டுத்தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்