சிரியாவில் போர் நிறுத்தம் எட்டுவது குறித்து ஆலோசிக்க லண்டன் செல்லும் ஜான் கெர்ரி

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து சிரியா குறித்து ஆலோசிக்க லண்டனிற்கு சென்று கொண்டிருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சனிக்கிழமையன்று ஸ்விட்சர்லாந்தில் ரஷியா மற்றும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கும் உடன்படாத சிரியாவின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கெர்ரி நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கெர்ரியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் புதிய யோசனைகள் ஆலோசிக்கப்பட்டன என்றும், சிரியாவில் அமைதி நிலவுவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு அது வழிவகுக்கும் என தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரஃப், ஆலோசிக்கப்பட்ட புதிய யோசனைகள் சுவாரஸ்யமாக இருந்தன என தெரிவித்துள்ளார்.

சிரியாவில் எதிரெதிர் படைகளுக்கு ஆதரவு வழங்கிவரும் தரப்பினருடன் திங்களன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்