நீண்ட கால பிரதமருக்கு எதிராக முடியுமா மாண்டனீக்ரோ நாட்டின் தேர்தல்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமரின் உருவப்படம் கொண்ட சுவரொட்டி

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் மாண்டனீக்ரோ நாட்டில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

நாட்டின் நீண்டகால பிரதமர் மற்றும் சோசியலிட் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மீலோஜுகானவிச், ஒரு தசாப்த காலத்திற்கு முன் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றதிலிருந்து நாடு மிகவும் கடினமான சவாலை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேடோவில் சேருவதற்கான அவரது அரசின் திட்டத்தை எதிர்க்கும், பல ரஷிய ஆதரவு மற்றும் செர்பிய ஆதரவு குழுக்களிடமிருந்து மீலோஜுகானவிச்சின் கட்சி இந்த தேர்தலில் எதிர்ப்பை சந்திக்கும்.

முன்னாள் யுகோஸிலேவ் மாநிலமான மாண்டனீக்ரோவில், ரஷியாவின் அரசியல் செல்வாக்கை பாதுகாக்க எதிர்க்கட்சிகள் பணம் பெற்று வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார் மீலோஜுகானவிச்.

மீலோஜுகானவிச் கடந்த 25 ஆண்டுகளில் தனக்கு வேண்டியவர்கள், தகுதியற்றவர்களாக இருந்தபோதும் பதவியில் அமர்த்தும் பழக்கத்தை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.