அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் ஒற்றுமை கச்சேரி

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும் நிலையில், அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட கச்சேரியில் பல லத்தீன் இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

மெக்ஸிகோ-அமெரிக்க பாடகர் லில டவுன்ஸ், கொலம்பிய நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் விவெஸ், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பாடகரும் பாடாலாசிரியருமான அலகண்ட்ரோ சாந்த் ஆகியோர் கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியகோவையும், மெக்ஸிகோவில் உள்ள டீக்வானாவையும், இணைக்கும் பாதசாரி பாலத்திற்கு அருகில் உள்ள திறந்த வெளிப் பகுதியில் நடந்த கச்சேரியில் கலந்து கொண்டனர்.

அந்த கச்சேரி அதிகாரப்பூர்வமாக பக்கசார்பற்ற நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் குடியேறிகளுக்கு எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் எதிர் நிகழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்