காசியன்டெப் நகர் தற்கொலை தாக்குதலில் 3 துருக்கி போலிஸார் பலி

காசியன்டெப் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது துருக்கி காவல்துறையினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption காசியன்டெப் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் நடைபெற்ற தாக்குதலில் 50-க்கு மேலானோர் பலியாயினர்

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் ஒரு பதுங்கிடமாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்ற அந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடவடிக்கையின்போது, தற்கொலை குண்டுதாரி ஒருவர் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்திருப்பதாக காசியன்டெப் ஆளுநர் கூறியிருக்கிறார்.

மக்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் நான்கு பேர் சிரியர்கள் என்று நம்பப்படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார்.

இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிராக மிக பெரிய தாக்குதலை துருக்கி கடந்த ஆறு மாதங்களாக காசியன்டெப் நகரில் சிரியாவின் எல்லைக்கு அருகில் நடத்திவருகிறது.

கடந்த ஆண்டு இஸ்லாமிய அரசு குழுவின் பல தாக்குதல்களுக்கு துருக்கி உள்ளாகியிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் காசியன்டெப் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் நடைபெற்ற தாக்குதலில் 50-க்கு மேலானோர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்