அர்ஜென்டினாவின் முதலாவது புனிதருக்கு பட்டம் வழங்கினார் போப் பிரான்சிஸ்

கோவேறு கழுதையை பயன்டுத்தி மறைப்பணியை மேற்கொண்டதால் "கவ் பாய்" என்று அறியப்படும் அர்ஜென்டினா பாதிரியாரை , போப் பிரான்சிஸ் தன் தாய் நாடான அந்நாட்டின் முதலாவது புனிதராக உயர்த்தியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புனித பேதுரு சதுக்கத்தில் “கவ் பாய்” என்று அறியபடும் புனித ஜோஸ் கபிரியேல் டெல் ரோசாரியோ புரோச்சேரோவுக்கு வழங்கப்பட்ட மரியாதை

1914 ஆம் ஆண்டு இறந்த ஜோஸ் கபிரியேல் டெல் ரோசாரியோ புரோச்சேரோ என்கிற பாதிரியார், தொழுநோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்தபோதும் தொலைத்தூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு மறைப்பணி ஆற்றியிருக்கிறார்.

கோவேறு கழுதையில் பயணம் மேற்கொண்ட அவர், அர்ஜென்டினாவின் கால்நடை பராமரிப்பாளர்கள் அல்லது ஆட்டிடையர்கள் அணிகின்ற தலை நுழைகின்ற அளவிலான உடலின் மேலங்கியான வண்ணமயமான பொன்ச்சோவை ஆடையாக அணிந்து படங்களில் தோன்றுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புனித பேதுரு பேராலயத்தில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய புனிதர் பட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

மரணத்திற்கு பிறகு புனிதர் பட்டம் வழங்கப்படுவதற்கு தேவையான குறைந்தது இரண்டு அற்புதங்களை அவர் நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தாலி மற்றும் பிரான்ஸிலிருந்து தலா இருவர், ஸ்பெயினை சேர்ந்த ஒருவர், மெக்ஸிகோவை சேர்ந்த ஒருவர் என மேலும் ஆறு கத்தோலிக்கர்களுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்