இரு வாரங்களுக்கு பின்னும் முழு சூழ்நிலை தெரியாத நிலையில் ஹேய்ட்டி

நூற்றுக்கணக்கான மக்கள் பலியான, கரீபிய நாடான ஹேய்ட்டியை தாக்கிய மேத்யூ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள முழுமையான சூழ்நிலையை இரண்டு வாரம் கழிந்த பின்னரும், இன்னும் ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வெள்ளப்பெருக்கு, சுத்தமற்ற நீர் ஆகியவை காலரா தொற்றுக்கு வழிவகுக்கும்

பல பகுதிகளை படகு, கோவேறு கழுதை மற்றும் நடைப்பயணம் மூலம் தான் இன்னும் சென்றடைய வேண்டிய நிலை உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியான் லின்ட்மெய்யர் தலைநகர் போட் ஆப் பிரின்ஸில் பேசியபோது தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல பகுதிகளை படகு, கோவேறு கழுதை மற்றும் நடைப்பயணம் மூலம் தான் இன்னும் சென்றடைய வேண்டிய நிலை

இந்த சூறாவளியால் ஏற்பட்ட உடனடிப் பாதிப்புக்களை மட்டுமல்ல, சில பகுதிகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் காலரா தொற்று பரவல் அதிகரிப்பை கட்ட்ப்படுத்துவதும் உதவி நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்