பிலிப்பைன்ஸ் லுசான் தீவை நாசம் செய்த சரிகா சூறாவளி

பிலிப்பைன்ஸில் உள்ள லுசான் தீவில் சக்தி வாய்ந்த சூறவாளி ஒன்று காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதால் அந்த பகுதிகளிலிருந்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

சரிகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறவாளி கடுமையான மழை மற்றும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றையும் கொண்டு வந்துள்ளது.

இதன் காரணமாக, வீட்டின் கூரைகள் கிழித்தெறியப்பட, பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சூறாவளி லுசான் தீவில் அரிசி உற்பத்தியை பாதித்துள்ளது. மேலும், சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹைமா என்ற மற்றொரு சூறாவளி இந்த வார இறுதியில் இதே பகுதியை மீண்டும் தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸில் உள்ள வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்