எத்தியோப்பியா: இன குழுக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய விதிகளை அமுல்படுத்தியது அரசாங்கம்

எத்தியோப்பியாவில் கடந்த வாரம் அவசர காலநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் ஒரு அங்கமாக அந்நாட்டு அரசாங்கம் புதிய விதிகளை அமுல்படுத்தியுள்ளதை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எத்தியோப்பியாவில் புதிய கட்டுபாடுகளை அமுல்படுத்தியது அரசாங்கம்

பல மாதங்களாக அங்கு நடைபெற்ற வன்முறை போராட்டங்களை தொடர்ந்து இந்த அவசர காலநிலை உத்தரவு பிறக்கப்பட்டது.

எத்தியோப்பிய தலைநகர் அடிடிஸ் அபாபாவிலிருந்து தூதரக அதிகாரிகள் 40 கி.மீ தூரத்திற்கும் அதிகமாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலைகள், பண்ணை மற்றும் அரசு நிறுவனங்கள் மீது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதிகள் மற்றும் முக்கிய பாதைகள் வழியாக துப்பாக்கிகள் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நிய சக்திகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எத்தியோபியாவின் இரு பெரிய இனக் குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக இந்த குழுக்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்