பாகிஸ்தானில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 25 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ரஹிம் யர் கான் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்திற்கு பேருந்துகள் வேகமாக சென்றதே காரணமாக இருக்கலாம் என்று போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்திற்குள் சிக்கிக் கொண்ட உடல்களை மீட்க மீட்புதவி பணியாளர்கள் வெட்டும் கருவிகளை பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்.

இந்த விபத்து நடந்த பகுதி அருகே வசிப்பவர்கள், பேருந்துகள் மோதி கொண்ட சத்தத்தை கேட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது என்று கருதியதாக ஒரு உள்ளூர் குடியிருப்புவாசி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்