கிழக்கு அலெப்போவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் பலி

சிரியாவின் கிழக்கு அலெப்போவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக 'வைட் ஹெல்மெட்ஸ்' என்றழைக்கப்படும் அந்நாட்டிலுள்ள சிவில் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கொல்லப்பட்டவர்களில், பிறந்து ஆறு வாரமே ஆன இரு குழந்தைகளும், எட்டு வயதுக்கு குறைவான ஆறு குழந்தைகளும் அடங்குவார்கள்.

கடந்த மாதம், அலெப்போவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் சிரியா அரசாங்கம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா மற்றும் சிரியா தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்