கலே முகாமில் குழந்தைகளின் நிலை: கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அவசர அழைப்பு

கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர்

அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது.

பிரிட்டனில் தங்கள் குடும்பம் இருக்கும் அகதிக்குழந்தைகளுக்கான, விரைவுபடுத்தப்பட்ட விதிகள் மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள், இந்த வாரம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காடு என்றழைக்கப்படும் முகாமிலிருந்து குழந்தைகளை விரைவாக அங்கிருந்து வெளியேற்ற தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும் என்றும், காலம் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது என்றும் முன்னாள் பேராயர் ரோயன் வில்லியம்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கலே குடியேறிகள் முகாம் இடிக்கப்படும் போது ஏற்படும் குழப்பத்தில் அங்கு எந்த குழந்தையும் விட்டுவிடப்படக்கூடாது என்று ஆல்ஃப் டப்ஸ் பிரபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்